பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரையில் வீட்டை ஒத்திக்கு விடுவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி மகன் ஸ்ரீபுகழ்இந்திரா (வயது 42). இவர் தனக்கு சொந்தமான வீட்டை ஒத்திக்கு விடுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்த சிலர் அவரை அணுகினர். அவ்வாறு அணுகிய அனைவரிடமும் ஒரே வீட்டை காண்பித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்கள், தகராறு செய்தும் பணத்தை திருப்பி கொடுக்காததால், போலீசில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீபுகழ் இந்திராவை கைது செய்தனர். இந்த நிலையில், அவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில், ஸ்ரீபுகழ் இந்திரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.