பயணியிடம் பணம் பறித்தவர் கைது


பயணியிடம் பணம் பறித்தவர் கைது
x

ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பயணியிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை ஆரப்பாளையம் சோனையாகோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). சம்பவத்தன்று இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.6 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆரப்பாளையம் மேல பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story