மேல்நிலைகுடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மேல்நிலைகுடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள எம்.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 54). இவரது மகன் குருநாதன் (23). கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குருநாதன், சகோதரர் செல்வகுமார் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். மதுப்பழக்கம் உள்ள குருநாதன் சம்பவத்தன்று அதிகாலை கிராமத்தில் உள்ள மேல்நிலைகுடிநீர் தொட்டியில் ஏறிய போது தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குருநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Related Tags :
Next Story