சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

லால்குடி:

லால்குடியை அடுத்த வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு என்ற பாலசுப்பிரமணியன்(வயது 46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவர், 16 வயது சிறுமியிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருப்பது, சிறுமிக்கு தெரியவந்தது. இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story