தொழிலாளி மீது டீயை ஊற்றி தாக்கியவர் கைது


தொழிலாளி மீது டீயை ஊற்றி தாக்கியவர் கைது
x

தொழிலாளி மீது டீயை ஊற்றி தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரிஜன தெருைவ சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). தொழிலாளியான இவர் தா.பழூர் கடைவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த மணிகண்டனின் மகன் மணிமாறன் (25) என்பவர் இளங்கோவனை பார்த்து ஏளனமாக சிரித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட இளங்கோவன் மீது மணிமாறன் கையில் வைத்திருந்த சூடான டீயை ஊற்றி, காலில் அணிந்திருந்த காலணியால் தாக்கி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தார்.


Next Story