மாணவியிடம் சங்கிலி பறித்தவர் கைது


மாணவியிடம் சங்கிலி பறித்தவர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தச்சநல்லூரில் பள்ளி மாணவியிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் கிருஷ்ணாநகா் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மகள் பிரியாஸ்ரீ (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் பிரியாஸ்ரீ கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சிவன் மகன் சந்தனகுமார் (25) என்பவர் மாணவியிடம் தங்க சங்கிலி பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அதிகாலையில் சந்தனகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story