வாட்ஸ்-அப்பில் பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது


வாட்ஸ்-அப்பில் பெண்ணிடம்  ஆபாசமாக பேசியவர் கைது
x

ஓட்டப்பிடாரம் அருகே வாட்ஸ்-அப்பில் பெண்ணிடம் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள இளவேலங்கால், அயிரவன்பட்டி பகுதியை சேர்ந்த சிம்சோன் மகன் ராஜ் (வயது 36). இவர் தன்னை பற்றி மிகவும் ஆபாசமாக பேசி வருவதாகவும், மேலும் தன்னுடன் பணிபுரியும் அலுவலர்களிடமும் வாட்ஸ்-அப்பில் அவதூறாக பேசி வருவதாகவும் அவருடன் பணிபுரியும் பெண் ஒருவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி நேற்று அயிரவன்பட்டி பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த ராஜை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story