நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
நண்பரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்
மதுரை
மதுரை பழங்காநத்தம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் குருபரதன் (வயது 32).இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள். சம்பவத்தன்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார், வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க நண்பரிடம் பணம் கேட்டனர். அதற்கு குருபரதன் தரமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story