சுசீந்திரம் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
சுசீந்திரம் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கைது
சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய தாயாரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்கரை பரதர் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (52) என்பவர் கேலி செய்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு மணிகண்டன், ராமமூர்த்தியை அக்கரை பகுதியில் உள்ள ஒரு கோழிக்கடை முன்பு சந்தித்த போது என்னுடைய தாயை கேலி செய்தது ஏன்? என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி கத்தியால் மணிகண்டனை குத்தியதில் காயமடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமமூர்த்தி மீது சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தார்.
Related Tags :
Next Story