வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவருடைய மனைவி சண்முகபிரியா. மணிகண்டன் தினமும் தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை சண்முகபிரியாவின் அண்ணன் மாரிமுத்து (20) தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த மாரிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
Related Tags :
Next Story