பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது56).பா.ஜனதா பிரமுகர். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முருகேசன் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கோவை கணபதியைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணன் என்பதும், அவர் சரவணம்பட்டி சாம்பிராணிக்குட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் யாரையாவது செல்போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் ஸ்ரீ ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Next Story