சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது


சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது
x

தொளசம்பட்டி அருகே விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி உ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 56), விவசாயி. இவருடைய மகன் வாமனன் (22) ஆகியோருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாள் மற்றும் அவரது தரப்பினர் அனிதாவிடம் பிரச்சினை செய்வதாக தொளசம்பட்டி போலீசுக்கு அனிதா செல்போனில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், போலீஸ் ஏட்டு உதயகுமார் ஆகியோர் அங்கு சென்றனர். உ.மாரமங்கலம் விநாயகர் கோவில் அருகே சென்றபோது பெருமாள் மற்றும் அவரது மகன் வாமனன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை அரசு பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகள் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை பெருமாளின் மகன் வாமனன் செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து உள்ளார். இதைப்பார்த்து சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனக்கும், போலீஸ் துறைக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பெருமாள் மற்றும் அவரது மகன் வாமனன் மீது தொளசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ே்பாலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். அவருடைய மகன் வாமனனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story