பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த தேவதாசின் மனைவி பவளக்கொடி(வயது 57). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தேசிங்கு (44) என்பவருக்கும் இடையே பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேசிங்கு, பவளக்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பவளக்கொடி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, தேசிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story