குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தியதாக மிரட்டியவர் கைது
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறை
மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையை கடந்த 16-ந் தேதி இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார். அவர், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தான் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டை பொருத்தி உள்ளதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனே கட்டுப்பாட்டு அறை போலீசார், பேசியவரின் செல் போன் எண் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் கோவையில் இருந்து பேசியது தெரியவந்தது. இது குறித்த தகவ லின் பேரில் கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
இதில், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவைப்புதூர் அருகே சுகுணாபுரம் செந்தமிழ்நகரை சேர்ந்த பீர்முகமது (வயது 44) என்பதும், அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான பீர் முகமது, 2017-ம் ஆண்டு நகர போலீஸ் கட்டுப் பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். இது போல் 2018-ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் குனியமுத் தூர் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும். முடிந்தால் கண்டு பிடியுங்கள் என்று மிரட்டல் விடுத்தார்.
7-வது முறையாக மிரட்டல்
4-வது முறையாக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
5-வது முறையாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். 6-வது முறையாக 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாஸ்மாக் கடை வெடித்து சிதற போவதாக மிரட்டல் விடுத்தார்.
தற்போது 7-வது முறையாக மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். ஏற்கனவே மிரட்டல் விடுத்த 6 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.