கிராம உதவியாளரை வெட்ட முயன்றவர் கைது
காவேரிப்பாக்கத்தில் கிராம உதவியாளரை வெட்ட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் பகுதியை சார்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் காவேரிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாரிமுத்து அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரிய கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (45) என்பவர் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story