வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு


வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
x

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மனோஜ்(வயது 28). இவர், கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜ் தளவாபாளையம் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டக்குறிச்சி வேப்பமர தெருவைச் சேர்ந்த அசோக்மேத்தா மகன் வீரபாகு(43) என்பவர் மனோஜ் அருகே சென்று தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வீரபாகுவை பிடித்து கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கினர். பின்னர் அவரை வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் அங்குள்ள கிளைச்சிறையில் அடைத்தார்.


Next Story