மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது


மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால் நேற்று அதிகாலை 5.06 மணிக்கு தான் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 30 நிமிடங்கள் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக ெரயில் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.


Next Story