பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:15:34+05:30)

மரக்காணம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

மரக்காணம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும், மதுராந்தகம் அருகே உள்ள தின்னலூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் வீரபாண்டியன் என்பவருக்கும் இன்று(வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

இது பற்றி அறிந்ததும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் போலீசார் நேற்று, பிளஸ்-2 மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவி மீட்கப்பட்டு, விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.


Next Story