மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x

திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் அரபுமுகமது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுரங்கப்பாதையில் படிக்கட்டுகள் அமைப்பதை கைவிட்டு இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story