தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு


தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
x
சேலம்

சேலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் சிலர் நாயின் புகைப்பட முகமூடியை அணிந்து கொண்டு சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்தனர். அதில் மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பல இடங்களில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story