மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்ய முயற்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்ய முயற்சி
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தாகி அம்மன் கோவில் அருகில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சந்தாயி அம்மன் கோவில் அருகில் சாலைமறியல் போராட்டம் செய்யப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. நேற்று காலை திருமுல்லைவாசல் ஊராட்சி சேர்ந்த 300- க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். தகவல் அறிந்த சீர்காழி போலீசார், கொள்ளிடம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 1 மாதத்திற்குள் சாந்தாகி அம்மன் கோவில் அருகில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.