மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரியலூர், திருமானூர், செந்துறை ஒன்றியங்களில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு குடிமனைப் பட்டா, இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அரசு தரிசு புறம்போக்கு இடம், கோவிலுக்கு சொந்தமான இடங்களை வகை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் துரை.அருணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டு பேசுகையில், வீடு இல்லாத ஏழை மக்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு அரசு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தொடங்கி வைத்தார். ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி நிறைவு செய்து மனுக்களை பெற்றார்.


Next Story