மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மயான சாலையை சீரமைத்து மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாட்டியக்குடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைச்செயலாளர்கள் ஜெயராமன், ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். உண்ணாவிரத்தை நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கொத்தங்குடி சாலையை தற்போது தற்காலிகமாக பொக்லின் எந்திரம் மூலம் விரைவில் சீரமைத்து தருவதாகவும், மற்ற கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் விலகி கொள்ளப்பட்டது.