முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்


முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்
x

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும் என சுகாதாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும் என சுகாதாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி

சிவகாசியை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 48 ஆயிரத்து 856 பேர் உள்ளனர். இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 413 பேர் ஆவார்கள்.

இதில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 10 லட்சத்து 55 ஆயிரத்து 920 பேர் செலுத்திக் கொண்டனர். இதேபோல் 2-வது தவணை தடுப்பூசியை 9 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 45 ஆயிரத்து 372 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் வீடுகளுக்கே சென்று செலுத்தி வருகிறோம். கடந்த சில நாட்களாக பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அட்டைமில் தொழிலாளிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் பணியாற்றி வந்த அட்டை மில்லில் சிறப்பு முகாம் நடத்தி மற்ற தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story