கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
இரணியல் அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே பள்ளிச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது55), கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் மதுபோதையில் இருந்த தங்கதுரை அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தங்கதுரை மகன் ரெஞ்சித் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story