மோகனூர் அருகேவிஷம் குடித்து மேஸ்திரி தற்கொலை


மோகனூர் அருகேவிஷம் குடித்து மேஸ்திரி தற்கொலை
x
நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சி மேலப்பேட்டபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). மேஸ்திரி ஆக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த வடிவேல் மது போதை பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வடிவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதை பார்த்த அவரது தாயார் சரசு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் வடிவேல் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை குடும்பத்தினர் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story