மரவள்ளியில் மாவுப்பூச்சி மேலாண்மை பயிற்சி


மரவள்ளியில் மாவுப்பூச்சி மேலாண்மை பயிற்சி
x

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மரவள்ளியில் ஒருங்கிணைந்த முறையில் மாவுப்பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலையில் மரவள்ளி பயிர்களை தாக்கும் மாவுப்பூச்சிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் புதிய ஒட்டுண்ணிகளை கொண்டு மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர், உயிர் கொல்லிகளை கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் மாவுபூச்சியை கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் விவசாயிகள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story