ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் தர்ணா
ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் தர்ணா செய்தனர்.
வாலாஜா
ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் தர்ணா செய்தனர்.
வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை முறையாக காட்டாமல், மத்திய, மாநில அரசுகளின் நிதியை கவுன்சிலர்களின் கையொப்பமின்றி தீர்மானங்கள் மூலம் முறைகேடு செய்வதாகவும், கடைகளை ஏலம் விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாகவும், இலவச தொகுப்பு வீடுகள் குறித்து தகவல் கூறாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து, அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.