ஆம்னி பஸ் மோதி கோழி வியாபாரி சாவு


ஆம்னி பஸ் மோதி கோழி வியாபாரி சாவு
x

ஆம்னி பஸ் மோதி கோழி வியாபாரி இறந்தார்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே உள்ள புரண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 65). கோழிகளை விற்பனை செய்யும் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் மேலூருக்கு நான்கு வழி சாலையில் மொபட்டை ஓட்டி வந்தார். அப்போது சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆம்னி பஸ் டிரைவரான நெல்லை நாராயணன்தெருவை சேர்ந்த சங்கர் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story