மோட்டார் சைக்கிள் மோதி பால் வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள் மோதி பால் வியாபாரி பலி
x

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பால் வியாபாரி இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

கபிலர்மலை அருகே உள்ள செம்மடாபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). பால் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் காலை கபிலர்மலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மீண்டும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வராஜ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை தேடி வருகின்றனர்.


Next Story