மினிலாரி தீயில் எரிந்து நாசம்


மினிலாரி தீயில் எரிந்து நாசம்
x

மினிலாரி தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

கரூர் அருகே உள்ள காக்காவாடியில் இருந்து சிப்காட் தொழிற்சாலைக்கு மரப்பட்டை கழிவுகளை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வாங்கபாளையம் மேம்பாலம் அருகே லாரி வந்தபோது திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஞானவேல் லாரியை விட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story