மனு கொடுத்த மறு நிமிடம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு காதொலி கருவி


மனு கொடுத்த மறு நிமிடம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு காதொலி கருவி
x

கள்ளக்குறிச்சியில் மனு கொடுத்த மறு நிமிடம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு காதொலி கருவி கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சடையதுரை மகள் அஸ்வினி(வயது 9) தனக்கு காதொலி கருவி வேண்டி மனு கொடுக்க பெற்றோருடன் வந்தாள். அவளது மனுவை பெற்று பரிசீலனை செய்த கலெக்டர் உடனடியாக ரூ.6,300 மதிப்பிலான காதொலி கருவியை சிறுமியிடம் வழங்கினார். மனு கொடுத்த மறு நிமிடமே பரிசீலனை செய்து காதொலி கருவி வழங்கிய கலெக்டருக்கு சிறுமியும், அவளது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story