1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயம்


1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயம்
x

புதுக்கோட்டை அருகே 1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயத்தை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில், நெல், கம்பு, தென்னை, கொய்யா, மா, வாழை போன்றவைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். புதுக்கோட்டை அருகேஇந்தநிலையில் இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள நாட்டு வாழைக் கன்று 2½ மாதத்தில் 1 அடி உயரம் வளர்ந்த போதே குலை தள்ளியுள்ளது. பொதுவாக நாட்டு வாழை, செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி போன்ற வாழை ரகங்கள் பூத்து குலை தள்ள சுமார் 8 மாதத்தில் இருந்து 12 மாதம் வரை ஆகும். அதேபோல 7 அடி முதல் 10 அடி உயரம் வரை வளர்ந்த பின்னர் தான் குலை தள்ளுவது வழக்கம். ஆனால் இவரது தோட்டத்தில் 2½ மாதத்திலேயே 1 அடி உயரம் வளர்ந்த நிலையில் குலைதள்ளி இருப்பது மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது. இதைக்கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் குலை தள்ளிய அதிசய வாைழக்கன்றை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story