'தி.மு.க.வை திருப்பி தாக்கும் ஏவுகணை அவர்களின் தேர்தல் வாக்குறுதிதான்' - கடம்பூர் ராஜு விமர்சனம்


தி.மு.க.வை திருப்பி தாக்கும் ஏவுகணை அவர்களின் தேர்தல் வாக்குறுதிதான் - கடம்பூர் ராஜு விமர்சனம்
x

தி.மு.க.வை திருப்பி தாக்கும் ஏவுகணை அவர்களின் தேர்தல் வாக்குறுதிதான் என கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி,

தி.மு.க. ஆட்சி சுட்டெரிக்கும் சூரியனாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"நிழலின் அருமை வெயிலுக்குப் போனால்தான் தெரியும். தமிழகத்தில் நடக்கும் ஆட்சி இன்று சுட்டெரிக்கும் சூரியனாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும், தி.மு.க.வுக்கு பாதகமாகவும் இருக்கும். தி.மு.க.வை திருப்பி தாக்கும் ஏவுகணை அவர்களின் தேர்தல் வாக்குறுதிதான்."

இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்.


Next Story