அரசு பள்ளி மாணவர்களை கலைஞர் கோட்டத்திற்கு அழைத்து சென்ற எம்.எல்.ஏ.
அரசு பள்ளி மாணவர்களை கலைஞர் கோட்டத்திற்கு எம்.எல்.ஏ. சென்றாா்.
மானாமதுரை,
திருவாரூரில் கலைஞரின் நூற்றாண்டை போற்றும் வகையில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திருவாரூர் சென்று கலைஞர் கோட்டத்தை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர் தேர்வு செய்யப்பட்டு 5 அரசு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ஆசிரியர், ஆசிரியைகள் பாதுகாப்புடன் திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டம் பார்க்க மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ஏற்பாடு செய்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. காலை உணவு வழங்கினார்.
பின்னர் அனைவருக்கும் தனித்தனியே அடையாள அட்டை, தொப்பி, பழங்கள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், மாநில தலைமை கழக பேச்சாளர் அய்யாசாமி, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா, இளையான்குடி ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி, ராஜேஸ்வரி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.