தம்மம்பட்டியில் குரங்குகள் அட்டகாசம் காய்கறி விற்ற மூதாட்டியை கடித்தது


தம்மம்பட்டியில் குரங்குகள் அட்டகாசம்  காய்கறி விற்ற மூதாட்டியை கடித்தது
x

தம்மம்பட்டியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.அங்கு காய்கறி விற்ற மூதாட்டியை கடித்தது.

சேலம்

தம்மம்பட்டி,

தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். நேற்று அவர் காயிதே மில்லத் நகர் பகுதியில் காய்கறி விற்க சென்றார். அப்போது அங்கு வந்த குரங்குகள் காய்கறிகளை குறி வைத்து வண்டி அருகே வந்தது.

அப்போது அதை தடுக்க முயன்ற சின்னம்மாளை ஒரு குரங்கு கடித்ததுடன், காய்கறி தள்ளுவண்டியில் இருந்த காய்கறிகளை எடுத்து கீழே போட்டது. மேலும் காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்கள் பதறியடித்து ஓடினர். அங்கு வந்த வாலிபர்கள் அந்த குரங்குகளை விரட்டி அடித்தனர். பின்னர் குரங்கு கடித்ததில் காயம் அடைந்த மூதாட்டியை தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, காயிதே மில்லத் நகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. இது குறித்து பலமுறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. விரைவில் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள். குரங்கு கடித்து பெண் காயமடைந்த சம்பவம் தம்மம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story