தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது


தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
x

சென்னை தலைசெயலகத்தில் தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

சென்னை,

தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அத்துடன் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் 6 மாதத்துக்குள் கூட்ட வேண்டும் என்ற விதிகள் இருக்கிறது. அதன் அடிப்படையில், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதிக்குள் தமிழக சட்டசபை கூட்ட வேண்டும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. அதிமுக உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

1 More update

Next Story