கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
வதம்பச்சேரியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தற்போது கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், பெரிய வதம்பச்சேரி பகுதியில் வட்டார சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கொசு உற்பத்தியை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்துகளை ஊற்றினர். மேலும் வீட்டின் வெளி பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற அறிவுறுத்தினர். தொடர் காய்ச்சல், சளி உள்ளவர்கள் அருகில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த பணியில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக் குமார் அப்துல் நசீர் ஆகியோர் ஈடுபட்டனர்.