மனு கொடுக்க வந்த தாய், மகன் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தாய், மகன் தீக்குளிக்க முயன்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 37). இவரது தாயார் நாகலட்சுமி (62). இவர்கள் 2 பேரும் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வீட்டு அடமான பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்தனா். அப்போது கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயிலில் 2 பேரும் தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story