கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரின் தாய், சித்தி கைது


கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரின் தாய், சித்தி கைது
x

குடியாத்தம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரின் தாய், சித்தி கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் நடைபெற்று மூன்று மாதம் ஆகியும் மாணவி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்- இன்ஸ்பெக்டர் அருண் காந்தி உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரதராமியை அடுத்த வரதாரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் லாரி டிரைவரான லோகேஷ் (25) கல்லூரி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. மாணவி கடத்தல் சம்பவத்திற்கு லோகேஷின் தாய் சுமதி (55), சித்தி டில்லி (50) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவி குறித்தும், அவரை கடத்தி சென்ற லோகேஷ் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story