மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில்கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில்கல்லூரி மாணவர் பலி
x

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை

மரத்தில் மோதல்

புதுக்கோட்டை பாலநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் நடேசன் (வயது 18). புதுக்கோட்டை அய்யானபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் சீனிவாசன் (19). இவர்கள் இருவரும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

நண்பர்களான இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சித்தன்னவாசல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். புதுக்கோட்டை-அன்னவாசல் சாலையில் பெருஞ்சுனை என்னும் இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர் பலி

இதில் நடேசன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story