ஆற்றில் குளிக்க சென்ற வாலிபரின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஆற்றில் குளிக்க சென்ற வாலிபரின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோடு
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் கள்ளிப்பட்டி அருகே உள்ள பவானி ஆற்றில் பரிசல் துறையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்றின் கரையோரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். குளித்துவிட்டு சிறிது நேரத்துக்கு பிறகு அவர் வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. குளிக்க சென்றபோது யாரோ மர்மநபர் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மோட்டார்சைக்கிளை திருடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story