ஆட்டை கடித்த மர்ம விலங்கு


ஆட்டை கடித்த மர்ம விலங்கு
x

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டை கடித்த மர்ம விலங்கால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சதாசிவம். இவர், தனக்கு சொந்தமான ஆடுகளை இரவு வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அதிகாலை சதாசிவம் எழுந்து பார்த்தபோது, மர்ம விலங்கு அடித்து ஆடு காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து அவர் நாட்டறம்பள்ளி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்கு சிகிச்சை அளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது. நாட்டறம்பள்ளி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story