தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்-அம்மன் தாலியையும் பறித்து ஓட்டம்
தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்-அம்மன் தாலியையும் பறித்து ஓடிவிட்டார்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்-அம்மன் தாலியையும் பறித்து ஓடிவிட்டார்.
தேசூர் பேரூராட்சி உள்ள தெருவில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. பூஜை முடிந்ததும் பூசாரி மற்றும் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் கங்கை அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை பறித்ததோடு அதே தெருவில் ராமதாஸ் என்பவர் வீட்டில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி சரசு அணிந்திருந்த 4 கிராம் நகையையும் அறுத்துக்கொண்டு ஓடி விட்டான்.
இது குறித்து தேசூர் போலீசில் ராமதாஸ் மற்றும் கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகா, கைரேகை நிபுணர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story