உறவினர்களுடன் மது அருந்தியவர் கிணற்றில் பிணமாக கிடந்த மர்மம்


உறவினர்களுடன் மது அருந்தியவர் கிணற்றில் பிணமாக கிடந்த மர்மம்
x
தினத்தந்தி 11 July 2023 11:36 PM IST (Updated: 12 July 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

உறவினர்களுடன் மது அருந்தியவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டை அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவரது பிணம் மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த அமாவாசை மகன் உதயகுமார் (வயது 40) என தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாராயணகுப்பம் கிராமத்தில் இறந்த பாட்டியின் காரிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில் உறவினர்களுடன் அதே பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளார். அதன்பின்னர்தான் அவர் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். உதயகுமார் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரோனும் அவரை அடித்துக்கொலை செய்து கிணற்றில் வீசினரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story