தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபருக்கு வலைவீச்சு


தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபருக்கு வலைவீச்சு
x

ஆலங்குளம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் பழைய இருசக்கர வாகன விற்பனை கடை நடத்தி வருபவர் எட்வின் செல்வகுமார். இவர் நேற்று காலை வழக்கம்போல கடைக்கு வந்தார். அங்கு கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி மற்றும் ஆலங்குளம் அருகே அத்தியூத்து கிராமத்தில் மோட்டார் சைக்கிள்களை அந்த மர்மநபர் திருடியதும், அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து லேப்டாப் மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.


Next Story