'டிடி பொதிகை' தொலைக்காட்சியின் பெயர் மாறுகிறது..!


டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாறுகிறது..!
x
தினத்தந்தி 10 Nov 2023 12:31 PM (Updated: 10 Nov 2023 1:10 PM)
t-max-icont-min-icon

டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

அவர் கூறும்போது, முன்பு அனைவரும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்ட புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்று கூறினார்.

மேலும் டிடி பொதிகை தொலைக்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி முதல் 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story