குறுகலான சாலை அகலப்படுத்தப்பட்டது


தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுகலான சாலை அகலப்படுத்தப்பட்டது

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் இருந்து லட்சுமி நகர் வழியாக வடசித்தூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை லட்சுமி நகர், கொண்டம்பட்டி, வடசித்தூர், மெட்டுவாவி, மன்றாம்பாளையம், பணப்பட்டி, கோதவாடி, காட்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட சாலைகிணத்துக்கடவு முதல் காட்டம்பட்டி வரை 16 கிலோ மீட்டர் தூரம், 5½ மீட்டர் அகலம் கொண்டது. இது போதுமானதாக இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்தனர். பின்னர் ரூ.10 கோடியில் முதற்கட்டமாக லட்சுமி நகர் முதல் வடசித்தூர் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 7 மீட்டர் அகலத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள 12 இடங்களில் வேகத்தடுப்பு கோடுகள் வரையப்பட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, முதற்கட்டமாக லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை 8 கிலோ மீட்டர் தூர சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மீதி உள்ள 8 கிலோ மீட்டர் தூர சாலை(வடசித்தூரில் இருந்து காட்டம்பட்டி வரை) அடுத்த ஆண்டு(2024) அரசு நிதி ஒதுக்கியதும் அகலப்படுத்தப்படும் என்றனர்.


Next Story