கைதான 2 பேர் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பா.ஜனதா ஆதரவாளர் கார்களுக்கு தீவைப்பு விவகாரத்தில் கைதான 2 பேர் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. ஆதரவாளரான அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் மனோஜ்குமாரின் 2 கார்களுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்துல் ஹக்கீம் (வயது 32), அப்துல் அஜீஸ் (28), செய்யது இப்ராஹிம்சா (27), முகம்மது மன்சூர் (32), முகம்மது அன்சாரி (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மேற்கண்டவர்களில் அப்துல் அஜீஸ் மற்றும் செய்யது இப்ராஹிம்சா ஆகியோரை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கண்ட இருவரும் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story