வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி குமரன் நகரில், குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் கார் கண்ணாடியை உடைத்தும், பெட்ரோல் குண்டு வீசியும் சேதப்படுத்திய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினராக இருந்த அப்துல் ஜலீல் (வயது 34) என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்துல் ஜலீலை போலீசார் கைது செய்தனர்.


Next Story